வெள்ளி, 13 பிப்ரவரி, 2009



இம்பாலா உசேன்




பசீர் அகமது

கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தை சீர்குலைக்க சதி!
நகராட்சி தலைவர் ஆவேசம்!!

கீழக்க்ரை பிப். 13கீழக்கரை நகரசபை கூட்டம் தலைவர் பசீர் தலைமையில் நடந்தது நிர்வாக் அதிகாரி சுந்தரம் தலைமை வகித்தார்.

கீழ்கண்டவாறு விவாதம் ந்டைபெற்றது
தலைவர் : அ ண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் பெத்தரி தெருவில் நீர் தேக்க தொட்டி அமைக்க ரூ19லட்சமும் வடக்கு தெருவில் சிமெண்ட் சாலை அமைக்க 21லட்சமும் பஸ் நிலையம் முதல் முத்துசாமிபுரம் வரை தார் சாலை அமைக்க 14லட்சமும்,இஸ்லாமியா பள்ளி அருகே சாலை அமைக்க 3.7லட்ச்மும் இன்னும் சில திட்டங்களுக்கும் சேர்த்து மொத்தம்79லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இம்பாலா முகம்மது உசேன்: இந்த திட்ட பணிகளுக்கு விடப்பட்ட ஒப்பந்தம் கோருவதில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளது.

நிர்வாக அதிகாரி: இது தவறான் குற்றச்சாட்டு அரசு விதிமுறைப்படியே டெண்டர் கோரப்பட்டுள்ளது.

தலைவர் பசீர்: நகரசபை நிர்வாகம் முறையாக நடந்து வருகிறது. இதை சீர்குலைக்க சிலர் சதி செய்து வருகின்றனர் இதை முறிய்டிக்க கவுன்சிலர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் .

இவ்வாறு விவாதம் நடைப்பெற்றது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக